2023 ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 43 ஓவர்கள் முடிவில் 164 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 89 ஓட்டங்களையும், டவ்ஹிட் ஹிரிடோய் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் மதிஷ பத்திரன 4 விக்கெட்டுக்களையும், மஹிஷ் தீக்ஷன 2 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டி சில்வா, டுனிட் வெலகே, தசுன் ஷனக ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 39 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. துடுப்பாட்டத்தில் சதீர சமரவிக்ரம 54 ஓட்டங்களையும் சரித் அசங்க 62 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 11 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது.