இந்தியாவின் Zee Tamil தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கை மாணவி அசானி உத்தியோகபூர்வமாக போட்டிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
குறித்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகி பல சமுகவலை தளங்களிலும் மிகவும் வேகமாக பரவி வைரலாகி வருகின்றது.
இந்நிலையில், குறித்த ப்ரோமோவில் கடந்த 11ஆம் திகதி இலங்கை பாராளுமன்றில், “மலையக மக்களைக் கௌரவப்படுத்தும் வகையில் அசானி Zee Tamil தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்“ என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பேசியிருந்த காட்சியும் அதில் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருப்பதுடன் அசானிக்கு பாராட்டுக்களையும் நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், ஏனைய போட்டியாளர்களின் பெற்றோர்களின் முழு சம்மதத்துடன் அசானி குறித்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாராளராக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.