அத்துடன், அணியில் தெரிவு செய்யப்பட்ட நட்சத்திர விரர் வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க, மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த வீரர்களுக்குப் பதிலாக பினுர பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோரின் பெயர்கள் தாமதமாக சேர்க்கப்பட்டதால், விளையாட்டு அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குசல் ஜனித் பெரேரா காய்ச்சலில் இருந்து மீண்டு முழுமையாக குணமடைந்தவுடன் அணியில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை 2023 ஆகஸ்ட் 30 (இன்று ) தொடங்கி எதிர்வரும் செப்டம்பர் 17 வரை நடைபெறும்.