இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வார இறுதியில் விஜயம் இலங்கைக்கு செய்யவுள்ளதாக பாதுகாப்பு தரப்புக்களை மேற்கொள்காட்டி த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சீன ஆய்வுக் கப்பல் ஒன்றின் வருகையை அனுமதிக்குமாறு சீனாவின் புதிய கோரிக்கையை இலங்கை வெளியுறவு அமைச்சு பரிசீலித்து வரும் வேளையில் இந்த இரண்டு நாள் விஜயம் முக்கியமானதாக அமையவுள்ளதாக த ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் திருகோணமலைக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனடிப்படையில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் எதிர்வரும் செப்டம்பர் 2 மற்றும் 3ம்திகதிகளில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.