அக்குரஸ்ஸ தெடியகல பிரதேசத்தில் வீடொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த பெண் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர் அக்குரஸ்ஸ தெடியகல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் எனவும், தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த பெண்ணின் சகோதரியின் கணவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் அக்குரஸ்ஸ தீகல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேகநபர், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியுடன் நேற்று இரவு அக்குரஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நடர் காட்டுப்பகுதி ஒன்றில் மறைந்திருந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.