கொழும்பில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் இன்று (28) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த 47 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் கைத்துப்பாக்கியால் அவரைச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
கொலையாளிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது