இனமுரண்பாட்டை தீர்க்கும் நிரந்தர தீர்வு சன்ன ஜயசுமன கருத்து: குருந்தூர் மலை விவகாரம்!

குருந்தூர் மலை விடயத்தினை அடிப்படையாக கொண்டு பௌத்தர்கள், இந்துக்கள் இடையே முரண்பாடான நிலைமைகள் வலுவடைவதற்கு இடமளிக்காது, நிரந்தரமானதொரு தீர்வினை காண்பது மிக அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

குறித்த இவ்விவகாரம் தொடர்பாக நேற்று (26) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், குருந்தூர் மலையானது தொல்பொருளியல் பகுதியாகும். அதற்கான சான்றாதாரங்கள் பல காணப்படுகின்றன. ஆகவே அந்தப் புராதன இடத்தினை பேணி பாதுகாப்பது மிக முக்கியமானது.

எனினும், குறித்த பகுதியில் பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் வழிபாடுகளைச் செய்துவந்ததாக வரலாற்றின் அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது.
ஆகவே, தற்போதைய நிலமையில், இந்த விடயத்தினை கொண்டு பௌத்தர்கள், இந்துக்கள் இடையே முரண்பாடான நிலைமைகள் வலுவடைவதற்கு இடமளிக்காமல், நிரந்தரமானதொரு தீர்வினை கண்டறிவது மிக அவசியமாகிறது.

அதனடிப்படையில், குறித்த மலையின் கீழ்ப் பகுதியிலுள்ள பிரதேசத்தில் தொல்பொருளியல் விடயங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல், இரு சமயத் தலங்களை நிர்மாணிப்பதே பொருத்தமானதாகும்.

குறிப்பாக, மலையின் கீழ்ப் பகுதியில் தலா ஒவ்வொரு ஏக்கர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்து மற்றும் பௌத்த தலங்களை நிர்மாணிப்பதன் ஊடாக இரு தரப்பினரும் தமது இறை நம்பிக்கைக்கு ஏற்ப தமது வழிபாடுகளை முன்னெடுக்க முடியும்.

இதற்கு சான்றாக வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமத்தினை முன்னுதாரணமாகக் கொள்ள முடியும். அதன் மூலமாக பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வினைக் காண முடியும் என தெரிவித்துள்ளார். 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.