இராணுவ முகாம் ஒன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று முன்தினம் (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தொடங்கொட இராணுவ முகாமைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த சிப்பாயை பரிசோதனை செய்த போது, அவர் பெண்களுக்கான உள்ளாடைகளை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அவர் இவ்வாறு நடந்து கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவத்தோட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.