இந்தியா விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்கு அனுப்பிய சந்திரயான் 03 திட்டத்தை தொடர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான விண்கலமொன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்திரயான் 03 விண்கலம் நிலவில் தரையிறங்கி தமது ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது.
இந்தநிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அதற்கமைய, பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி ஒன்றில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இந்த விண்கலம், ஸ்ரீ ஹரிகோட்டா ஏவுகணை ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி ஏவுகணை மூலம் அனுப்பப்படும் என இஸ்ரோ குறிப்பிடப்பட்டுள்ளது.