ஆரம்பபிரிவு குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
அத்துடன், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்திரமான நாட்டை நோக்கி நேற்று (25) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்பள்ளி ஒன்றை ஆரம்பிக்கும் போது அது குறிப்பிட்ட சட்ட கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், முன்பள்ளி ஆசிரியர் பட்டதாரியாக இருக்க வேண்டும் எனவும் அவர்களுக்கே உரிய விசேட பயிற்சி தேவை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.