நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர 22.08.2023 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் நாடாளுமன்றில் உரையாற்றியுள்ளார்.
இந்த உரையைக் கண்டித்தும், எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த கண்டன போராட்டம் இன்று (25) காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை இந்த அடையாள கண்டனப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த அடையாள புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கிளைச் சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் குறித்த அடையாள கண்டன போராட்டத்தினை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
போராட்டம் இடம்பெற்ற நேரத்தில் யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.