இந்த ஆண்டு இதுவரை நாட்டில் மொத்தம் 123 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை மற்றும் காட்டுத் தீ அதிகரிப்பு தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
காட்டுத் தீயை குறைக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார்
எனவே, காடுகள் இவ்வாறு அழிவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.