பண்டாரவளை பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பண்டாரவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவத்தில் அடம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்
களனி கொனவல பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவர் குறித்த ஹோட்டலுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்துள்ள நிலையில் உயிரிழந்ததாக கூறப்படும் குறித்த பெண்ணை நேற்றைய தினம் விடுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
பின்னர் அந்த நபர் திடீரென ஹோட்டலை விட்டு வெளியேறியதும் சந்தேகத்தின் பேரில் விடுதி ஊழியர்கள் அவர்கள் இருந்த அறையை சோதனையிட்டனர். அங்கு குறித்த பெண் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையின் போது கூரிய ஆயுதம் மற்றும் விஷம் கொடுத்து இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய சந்தேகநபர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.