யாழ். வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒரு இளைஞரும் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று (24) மதியம் கரணவாய் வடமேற்கு கொற்றாவத்தை கணபதி மில்லுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தினையடுத்து மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததுடன், அதில் பயணித்த இருவருமே இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்
விபத்தில் படுகாயமடைந்த 21 வயதுடைய இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விபத்து தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.