இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வழங்கும் வசதி வீதம் ஆகியவற்றை மாற்றமில்லாமல் வைத்திருக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, நிலையான வைப்பு வசதி வீதத்தை 11 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானித்துள்ளதுடன் வழமையான கடன் வசதி வீதத்தை 12 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் பரிவர்த்தனை வசதி உட்பட மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அளவு ஜூலை 2023 இறுதிக்குள் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் மத்திய வங்கி கூறியுள்ளது