இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமிர நடைபெறவிருக்கும் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளார்.
இதன்படி, சிலோன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடரில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை இழக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் மேலும் ஓய்வெடுக்க மருத்துவ ஆலோசனை பெற்றுள்ளார். எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் அணி இதுவரை வெளியிடவில்லை.