கண்டி எசல மகா பெரஹராவின் இரண்டாவது பெரஹெரா நேற்று (22) இடம்பெற்ற போது அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
அதன்படி, ஊர்வலத்தின் போது ஊர்வலத்தில் பயணித்த இரண்டு யானைகளுக்கு திடீரென மதம்பிடித்து குழப்பத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்போது, ஊர்வலத்தை காண வந்தவர்கள் பதற்றத்துடன் ஓடியதில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது, மேலும் ஊர்வலம் காண வந்த மக்களில் சிலர் பதற்றத்தினால் கண்டி ஏரியிலும் குதித்துள்ளனர் இதனையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறையின் உயிர்காப்புக் குழுவினர் மற்றும் கடற்படை வீரர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு இந்நிலை சுமுகமாக்கப்பட்டது.
அத்துடன் தொந்தரவுக்கு உள்ளான இரண்டு யானைகளை அகற்றிய பின்னர் பெரஹரா தொடர்ந்து வீதிகளில் வலம் சென்றதாகவும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.