இலங்கையின் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள கிம்புலாவல பகுதியில் உள்ள தெருவோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்த உணவு விற்பனை நிலையங்களை 14 நாட்களுக்குள் அகற்றுமாறு விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த வீதியின் ஊடாக இயங்கும் வாகனங்களுக்கு இந்த தெருவோர உணவு விற்பனை நிலையங்கள் இடையூறாக உள்ளதுடன், அனுமதியின்றி இரண்டு மாடிக்கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.
இதன் காரணமாக இப்பிரதேசத்தில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன.
வீதி விபத்துக்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது