வடக்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் யான் நகருக்கு அருகே உள்ள Xintai நிலக்கரி சுரங்கத்தில் இவ்விபத்து நேற்று முன்னிரவு இந்த பயங்கர வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளதாக நேற்று(22.08.2023) சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அத்துடன் விபத்து ஏற்பட்ட போது 90 பேர் வரை நிலக்கரி சுரங்கத்தில் இருந்ததாகவும், உயிரிழந்தவர்கள் தவிர மேலும் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் அது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.