தற்போது நாட்டில் பலபகுதிகளில் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அதிக வெயில் காரணமாக அதிகரித்த வெப்பநிலை நிலவுகிறது .
அதிக வெப்பம் மனித உடலில் வெப்ப அதிகரிப்பை ஏற்படுத்தி உடலில் நீர் இழப்பை ஏற்படுத்துகிறது. இது “வெப்பச் சுட்டெண்” என அழைக்கப்படும். இந்த வெப்பச் சுட்டெண்ணானது சரீரப்பதனுக்கும் அதிகரித்த வெப்பநிலைக்கும் இடையிலான தொடர்பின் கணிப்பீடாகும்.
உடலிலிருந்து அதிகப்படியான நீரை இழக்கும் போது உறுப்புகள், செல்கள் மற்றும் திசுக்கள் செயல்பட முடியாமல் போகிறது. இதுவே பின்னாளில் ஆபத்தான சிக்கல்களுக்கு வழி வகுக்கும், அதிகரித்த நீர் இழப்பின்போது மரணம் ஏற்பட கூடிய வாய்ப்புள்ளது.
சாதாரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படும் போது உடலில்
சோர்வு
உலர்ந்த வாய்
தாகம் அதிகரித்தல்
சிறுநீர் கழித்தல் குறைந்து போதல்
கண்ணீர் உற்பத்தி குறைதல்
உலர்ந்த சருமம்
மலச்சிக்கல்
தலைச்சுற்றல்
தலைவலி
இவ்வாறான ஆரம்ப அறிகுறிகள் தென்படும்.
இவற்றை தவிர்த்துக்கொள்ள அதிகளவில் நீர் ஆகாரங்கள், நீர்ப்பாணங்கள் பருகவேண்டும்.
வெளி இடங்களில் வேலை செய்பவர்கள் களைப்படையாமல் இருக்க அடிக்கடி நிழல் சார்ந்த இடங்களில் ஓய்வெடுத்தல் வேண்டும்.
வீட்டில் உள்ள நோயாளிகளை அடிக்கடி கவனித்து நீராகாரங்களை உட்கொள்ள கொடுக்க வேண்டும்.
சிறுவர்கள் நண்பகல் வேளைகளில் வெயிலில் சென்று விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெயிலுடன் வெளி இடங்களில் காணப்படும் செயற்பாடுகளை இயன்றளவு குறைத்துக்கொள்ள வேண்டும்.
கருமை நிற ஆடைகள் அணிவதை தவிர்த்து மெல்லிய வெண்மை நிறமுடைய, காற்றோற்றமான ஆடைகளை அணிய வேண்டும்.