இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் டொக்டர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வைத்தியர், நாளாந்தம் சுமார் 170 இருதய நோயாளிகள் பதிவாகுவதாக தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களாக இந்நிலை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், தற்போதுள்ள வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையே இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பிரதான காரணமாகும் எனவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் உட்கொள்ளும் உணவில் அதிகளவு சீனி உள்ளதாகவும், இந்நாட்டில் ஒருவர் வருடத்திற்கு 30 கிலோ சீனியை உட்கொள்வதாகவும், எண்ணெய் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்பதால் இதயநோய்கள் அதிகரிப்பதாகவும் டொக்டர் கோட்டாபய ரணசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.