2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் பெயர் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதனை அறிவித்துள்ளது.
18 பேர் கொண்ட இந்த குழாமின் தலைவராக ரோஹித் சர்மா பெயரிடப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்த குழாமில் சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான், திலக் வர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், சர்துல் தாகூர், குல்தீப் யாதவ், மொஹம்மட் சமி, ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ்,ப்ரசித் கிரிஷ்னா மற்றும் சஞ்சு செம்சன் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.