மோல்டா மாநிலத்தில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சில தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு அந்த மக்களுக்கு சவால் விடுவதாக கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் தெரிவித்தார்.
இவ்வாறு மக்கள் பணம் விரயம் செய்யப்பட்டிருந்தால் அரசியல் செய்ய வாய்ப்பில்லை எனவும், சேற்றிலும், அவதூறுகளிலும் துவண்டு போகும் கட்சியல்ல தமது கட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊழல்வாதிகளுக்கு எதிராக முதல் தடவையாக பொது மக்களின் ஒற்றுமையுடன் இணைந்து ஒரு இயக்கம் உருவாகியுள்ளதாகவும், இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.