அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 5.1 மெக்னிடியுட் எனும் ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஓஜாய் நகருக்கு தென்கிழக்கே நான்கு மைல் தொலைவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் இந்நிலநடுக்கம் பல பிரதேசங்களில் உணரப்பட்டுள்ளதுடன், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.