ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (21) நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தனது விஜயத்தின் போது சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யெகெப் அவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் நெங் எங் ஹென், நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ ஹை யென் ஆகியோர் இருதரப்பு விவாதங்களை நடத்த உள்ளனர்.
ஜனாதிபதியின் குறித்த விஜயம் காரணமாக 4 இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பதில் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பதில் தொழிநுட்ப அமைச்சராகவும், இராஜாங்க சமூக வலுவூட்டல் அமைச்சர் அனுபா பெஸ்குவால் பதில் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் செயற்படவுள்ளனர்.