நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்தில் நேற்று (20) பிற்பகல் விறகு சேகரிக்க சென்ற இளைஞர்கள் மீது குளவிக் கொட்டியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் அறுவர் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இதில் மூவர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன் மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நுவரெலியா பம்பரகலை தோட்டத்தைச் சேர்ந்த சிவபொருமாள் தில்ஷான் (16) என்ற சிறுவனொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் குளவி கொட்டும் போது தப்பித்து ஓடுவதற்கு முயன்று தடுக்கி விழுந்து இடத்திலேயே கடுமையான குளவி கொட்டு தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.