நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.
வறட்சியினால் பாதிக்கப்பட்ட 3867 குடும்பங்களைச் சேர்ந்த 17,372 பேருக்கு பவுசர்கள் மூலம் நீர் வழங்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் வி.பி.சுமணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் பெலியத்த, தங்காலை, லுணுகம்வெஹர, திஸ்ஸமஹாராம மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பௌசர ஊடாக நீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.