புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இருநூற்றி இருபத்தைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வரியில்லா வாகனங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கேட்டுள்ளதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரியில்லா வாகன இறக்குமதி உரிமத்தை இழந்துள்ளதாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான ஏறக்குறைய 80 எம்.பி.க்கள் தமது உரிமைகளை இழந்துள்ளதாகவும் இது குறித்து பல புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டபோது, அடுத்த ஆண்டு (2024) தேர்தல் ஆண்டாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், அதனால் கிராமங்களுக்கு சென்று வருவதற்கு ஏற்ற வாகனம் இல்லை என்றும் தெரிவித்தனர்.