கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொழும்பு – மோதரையில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது. வவுனியாவைச் சேர்ந்தவரும் வெல்லம்பிட்டியில் வசிப்பவருமான அருணாசலம் அஜந்தன் (வயது 24) என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் கொழும்பில் கடந்த 5 வருடங்களாக குடும்பத்தினருடன் தங்கி நின்று வேலை புரிந்து வந்த நிலையில், நேற்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.