படல்கம – தெற்கு கெஹெலல்ல பிரதேசத்தில் மரதாவத்தை என்ற காணியில் காவலாளியாக பணியாற்றிய பெண் ஒருவர் காவலாளி வீட்டில் உள்ள அறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ள பெண் 59 வயதுடையவர். மேலும் குறித்த பெண் தாம் பாதுகாத்து வந்த இந்த தென்னை காணியில் 27 வருடங்களாக காவலாளியாக பணிபுரிந்துள்ளார்.
குறித்த சடலம் கைகள் துணியால் கட்டப்பட்டு, தூங்கிக்கொண்டிருந்த படுக்கையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த பெண் தங்கியிருந்த வாட்ச் ஹவுஸின் மேற்கூரை ஓடுகளை யாரோ அல்லது குழுவினரோ கழற்றி வீட்டினுள் புகுந்து இந்தக் கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.