கந்தளாய் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, இளைஞன் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கந்தளாய் வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாக பாதங்கள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் சுமார் 7 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்தவரின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் இருவரும் இதேபோன்று வாகன விபத்துக்குள்ளாகி சில வருடங்களுக்கு முன்னர் கால்கள் சேதமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கந்தளாய் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்