வவுனியா பல்கலைக்கழக மைதான வளாகத்தில் உள்ள நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து இரண்டு பாடசாலை மாணவர்கள் பலியாகினர்.
குறித்த மைதானத்தில் நேற்று(17) இடம்பெற்ற கோட்ட மட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்றிருந்த மாணவர்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்கலேஸ்வரன் அவர்கள் மீதும் இறந்த மாணவர்களது உறவினர்களால் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்விடத்தில் பல்கலைகழக மாணவர்களும் அதிகமாக பிரசன்னமாகி இருந்தமையால் இரு பகுதியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படவும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், இணைந்து இருதரப்பினரையும் சுமூக நிலைக்கு கொண்டுவந்திருந்ததுடன் துனைவேந்தரை பாதுகாப்பாக அப்பகுதியிலிருந்தும் அழைத்து சென்றிருந்தனர்
மேலும் உயிரிழந்த மாணவர்களின் இரு சடலங்களும் வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.