35 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோயைக் முன்கூட்டியே கண்டறிவதற்காக தங்கள் சுகாதாரப் பகுதியில் உள்ள சுவனாரி கிளினிக்குகளுக்குச் செல்லுமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொள்கிறது.
இதன்படி, மாதவிடாய் முடிந்து 7ஆம் அல்லது 10ஆம் நாளில் அனைத்து பெண்களும் மார்பக சுய பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
இப்புற்றுநோயானது இரண்டாவது அல்லது மூன்றாவது கட்டத்தில் கண்டறியப்பட்டு மிகவும் தீவிரமானதாக மாறும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பதாகவும், தற்போதும் பெண்கள் மத்தியில் இது தொடர்பில் அக்கறையின்மை காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுவனாரி கிளினிக்குகளுக்குச் சென்று அது தொடர்பான பரிசோதனைகளில் கலந்துகொள்வதன் மூலம் தங்களது தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இந்திக்க டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.