சூரியவெவ பிரதேசத்தில் குடும்பத்தின் மூத்த சகோதரனை அவரது தம்பி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பிரதேசத்தில் நேற்று(16) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணி சம்மந்தமான தகராறு காரணமாக தனது சகோதரனை இவ்வாறு கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் இளைஞன் 29 வயதுடையவர் எனவும் அவரது சகோதரர் 24 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் குறித்த இளைய சகோதரர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.