இலங்கையின் நிதிக் கடன் சவால்களை திறம்பட கையாள்வதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் வெளிவிவகார ஆணைக்குழுவின் பணிப்பாளர் வான் யீ இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறைமை சுதந்திரம் மற்றும் தேசிய பெருமையை பாதுகாப்பதற்கு சீனா பலமாக ஆதரவளிப்பதாகவும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் நடைபெற்று வரும் 07வது சீன – தெற்காசிய கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே வான் யீ இதனைத் தெரிவித்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.