இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க சர்வதேச டெஸ்ட் மைதானத்தில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். அதேவேளை ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி தேசிய அணிக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஹசரங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் நிபுணராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த நினைத்தே இந்த முடிவை எடுத்ததாகவும், நாட்டிற்கு சிறந்த முறையில் சேவையாற்றுவேன் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.