கனமழை காரணமாக இந்திய, வட மாநிலமான இமாச்சல பகுதியில் ஒரு பழங்கால இந்து ஆலயம் இடிந்து விழுந்துள்ளது.
இதில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல சுற்றுலா நகரமான சிம்லாவில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கனமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஹிமாச்சல பகுதியில் குறைந்தது 29 பேர் உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.