உத்தேச டிஜிட்டல் அடையாள அட்டை மூலம் எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் குறிப்பிட்ட இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சாகல ரத்நாயக்க தெரிவிக்கையில், ஒவ்வொரு குடிமகனையும் உரிய இலக்கத்தின் மூலம் அடையாளம் காணும் முறைமையொன்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு சென்றாலும், அரசு அலுவலகம் சென்றாலும் அனைத்து விடயங்களும் இந்த எண் மூலமாகவே நடக்கும் என்றும் இதற்கு சுமார் இரண்டு வருடங்கள் வரை ஆகலாம் என்றும் குறிப்பிட்டார்.