கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இரு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதான இருவரும் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நெதர்லாந்து செல்ல முயன்றவர்கள் என கூறப்படுகிறது.
விசாரணையின் அடிப்படையில் இந்தியாவை சேர்ந்த 43 மற்றும் 39 வயதான இந்திய ஆணும் பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் 26ம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளனர். இரு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.