சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, செப்டெம்பர் 11ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை 8 நாட்களுக்கு மீளாய்வு நடைபெறவுள்ளதாகவும், மத்திய வங்கி, நிதியமைச்சு, நிதியமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினரும் இணைந்து இந்த மீளாய்வை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த மீளாய்வின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையாக கிட்டத்தட்ட 350 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.