விகாரை நிர்மாணிப்பு பணி நிறுத்தம்: போராட்டத்தில் இறங்கிய பௌத்த பிக்குகள்!

திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட இருக்கும் பெளத்த விகாரை காரணமாக  இனமுறுகல் ஏற்படும் என
திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து உத்தேச விகாரையின் பணிகள் ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டன.

அப்பகுதியில் நிர்மாணிக்கப்பட இருக்கும் பௌத்த விகாரையின் பணிகள் இடைநிறுத்த பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் அதன் நிர்மாணிப்பு பணிகள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிலாவெளி பெரியகுளம் பகுதியில் சுமார் 500 இற்கும்  மேற்பட்ட தமிழ் குடும்பங்களும் 02 சிங்கள குடும்பங்களும் வசித்து வருகின்றன. இந்நிலையில்
விகாரை நிர்மாணப்பணி  தொடந்து இருந்தால் இப்பிரதேசத்தில் பாரிய இனமுறுகல் ஏற்படும்  என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கிழக்கு மாகாணத்தில் அனைத்து இன மக்களின் நலன்களை பேணும் ஆளுநர் என்ற அடிப்படையில் இனங்களுக்கிடையில் இனமுறுகல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் முகமாக உத்தேச விகாரையின்  நிர்மாணப் பணிகளை  உடனடியாக நிறுத்துமாறு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் விளைவாக புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று (12) காலை 9.00 மணி தொடக்கம் 10.30 மணி வரை நடைபெற்றுள்ளது.

திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதியை மறித்து இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,
சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தைக் குழப்புகின்ற ஆளுநரை அனுப்புவோம்.” மற்றும் ”புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப்பணியை நிறுத்த சம்பந்தன் யார்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.