மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, ஊவா மற்றும் வட மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தீவின் மற்றய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற வானிலை நிலவுவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் பொது மக்களை கோரியுள்ளது.