2023 சிலோன் பிரீமியர் லீக் தொடரின் அனுசரணையாளராக இருக்கும் MTFE க்கு எதிராக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
குறித்த நிறுவனமானது இலங்கை மத்திய வங்கியின் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அல்ல என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2023 சிலோன் பிரீமியர் லீக்கின் அனுசரணையாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் IPG உடன் அந்த அமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, இதன்படி, இந்த நிறுவனத்தின் லோகோவை ஜெர்சியில் அச்சிடுவதற்குகான் பணியில் இந்த நிறுவனங்கள் செயல்பட்டு உள்ளது, அத்தோடு யாழ் கிங்ஸ் அணியும் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் விளம்பர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆனால், இந்த நிறுவனம் பிரமிட் நிறுவனமாக செயல்படுவதாக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எல்.பி.எல். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் IPG நிறுவனம் பின்னர் அனுசரணையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டன