யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் கடந்த 07ஆம் திகதி 54 வயதுடைய நபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலைசெய்யப்பட்ட நபர் அப்பகுதியில் உள்ள 19 வயதுடைய இளம்பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது காதலியை வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் காதலியை அழைத்துக் கொண்டு சுன்னாகம் பகுதிக்கு திரும்பியதாகவும், அங்கு சிறுமியின் உறவினர்களால் அவரும் சிறுமியும் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.