அடுத்த சில மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ, பெட் ஸ்கேன் சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போதுள்ள கதிர்வீச்சு தொழில்நுட்ப நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக இந்த சேவைகளை நடைமுறை படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
தற்போது சுமார் 40% பற்றாக்குறையுடன் இந்த சேவை ஸ்தாபிக்கப்படுவதாகவும், மாதத்திற்கு 3-4 அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சுகாதார அமைச்சு இச்சேவைக்கான ஆட்சேர்ப்புகளை தாமதப்படுத்தி வருவதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வியலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.