ஜப்பானின் டோக்கியோவில் கடந்த 08 ஆம் திகதி நடைபெற்ற 04வது உலக சிறுவர் சமாதான உச்சி மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வயங்கொட பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.கஸ்மிர ஜயவீர, அந்த மாநாட்டில் சிறந்த சமாதானம் என்ற தலைப்பில் தனது உரையை நிகழ்த்தினார். அத்தோடு அவுரைக்காக அவர் மிக அமைதியான பேச்சு எனும் விருதை பெற்றுள்ளார்.
இந்த மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட முதல் இலங்கையரான கஸ்மிரா ஜயவீர, உலக அமைதியை நிலைநாட்டுவதற்கான எவ்வாறு கல்வி மற்றும் மொழிக்கல்வி மூலம் அடைய முடியும் என்பதை விளக்கியுள்ளார்.
இந்த விருதை வென்ற மாணவி கஸ்மிரா ஜயவீர 08ஆம் திகதி இரவு 11.25 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பாடிக் எயார் விமானமான OD-297 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவரை வரவேற்க, வயங்கொட பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் மற்றும் அதன் மாணவர்களும், கஸ்மிராவின் தந்தை பணிபுரியும் கட்டுநாயக்க விமான நிலைய தீயணைப்பு திணைக்கள அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வருகை தந்திருந்தனர்.