பாராளுமன்றம் இன்று (09) இரண்டாவது நாளாகவும் கூடவுள்ளது.
இத்திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, கடன் பெறுவதற்கான வரம்பெல்லையை 4,979 பில்லியன் ரூபாவிலிருந்து 13,979 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க இந்த சட்டமூலம் முன்மொழிகிறது.
மேலும், சூதாட்ட மற்றும் சூதாட்ட வரி திருத்ததின் இரண்டாம் வாசிப்பு மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் கீழ் உத்தரவுகள் மீதான விவாதம் ஜூலை 21 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.