மீரிகம, விலவத்த பிரதேசத்தில் கொள்கலன் ட்ரக் வண்டியொன்று புகையிரதத்துடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
பஸ்யால சந்தியிலிருந்து மீரிகம அதிவேக நெடுஞ்சாலைக்கு பயணிக்கும் வாகனங்கள் பஸ்யால சந்தி ஊடாக பிரவேசிக்க முடியாது. இந்நிலையில் கொழும்பு-கண்டியூர வீதியையும், திவுலப்பிட்டியில் இருந்து பயணிக்கும் வாகனங்கள் மீரிகமவில் இருந்து இடதுபுறம் திரும்பி தன்ம்பிவிட்ட மற்றும் வரக்காபொல வீதிகளில் பிரவேசித்து கொழும்பு-கண்டியூர வீதியில் பிரவேசிக்க முடியும்.
மீரிகம அதிவேக வீதியில் இருந்து கொழும்பு மற்றும் திவுலப்பிட்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஹத்தமுல்ல சந்தியில் இடதுபுறம் திரும்பி கொழும்பு – குருநாகல் வீதி இலக்கம் 5 க்குள் பிரவேசிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இதன் காரணமாக பிரதான பாதையின் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.