தாய்,மகள் என இரண்டு பெண்களுடன் அறையொன்றில் நிர்வாணமாக இருந்த நிலையில் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பல்லேகம சுமன என்ற பிக்குவே இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ காவல்துறையினர் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (08) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நவகமுவ, பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் விஹாரைக்கு சொந்தமானது எனக் கூறப்படும் வீட்டைகுறித்த தேரர் நடத்தி வந்த நிலையில், தாய், மகள் எனக் கூறப்படும் இரண்டு பெண்களுடன் வீட்டின் அறையில் நிர்வாணமாக இருந்த வேளையில், பிரதேசவாசிகளால் சுற்றிவளைக்கப்பட்டார்.
அதன்பின்னர், மூவர் மீதும் அங்கிருந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்பின்னர், அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.