ஆறாம் வகுப்பு முதல் புதிதாய் இணைக்கப்பட உள்ள பாடத்திட்டங்கள்

கல்வியின் டிஜிட்டல் மயமாக்கல்” எனும் பிரதான கருப்பொருளின் கீழ் 2022 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டின் அடிப்படையில் அதாவது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியை உருவாக்குதல் மற்றும் இலங்கையில் கல்வியை 2030 ஆம் ஆண்டளவில் மாற்றியமைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கேற்ப, பொதுக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் பயிற்சி ஆகிய மூன்று துறைகள் தொடர்பாக மைக்ரோசாப்ட்(Microsoft) நிறுவனத்துடன் இணைந்து மூன்று முறையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, தற்போது கற்பிக்கப்படும் தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் படிப்படியாக  செயற்கை நுண்ணறிவு பாடம் ஒருங்கிணைக்கப்படும் எனவும்,

பள்ளிக் கல்வி, 6-9 மற்றும் 10-13 ஆகிய இரண்டு சுற்றுகளாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், எட்டு ஆண்டு கால செயல்முறை நான்கு ஆண்டுகளில் முடிக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு கூறினார்.

அதே நேரத்தில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், 85 வலயங்களில் உள்ள கணினி வள மையங்களில் புதிய கணினி வள மையங்கள் நிறுவப்பட்டு, மீதமுள்ள 15 வலயங்களில் ஆசிரியர் பயிற்சி தொடங்கப்பட்டு, தேவையானவற்றை பராமரிக்க ‘ஃபைபர் ஆப்டிக்’ இணைப்புகள் பெறப்படும். தடையின்றி இணைய வசதிகள் செய்யப்படவுள்ளன என்றார் அமைச்சர்.

மேலும் மஹிந்தோதய கணினி ஆய்வகங்களில் தற்போதுள்ள இணைய வசதிகள் மற்றும் கணினி உபகரணங்களைப் புதுப்பித்தல், சில முன்னணி பள்ளிகளுக்கு அதிவேக இணைய வசதிகளை வழங்குதல், பிராந்திய அளவில் சிறிய பழுதுபார்க்கும் குழுக்களை உருவாக்குதல்,
போன்ற செயற்திட்டங்கள் மூலம் டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறை கல்வி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.